Friday, May 6, 2011

சிறந்த பாடல்கள் -1


தோழர்களே இது ஒரு தொடர் பதிவு. எனக்கு பிடித்த பாடல்களை ஒவ்வொரு பதிவிலும் கொடுக்க போகிறேன். இந்த பதிவில் யுவன் தன் சொந்த குரலில் படிய சிறந்த பாடல்களை தொகுத்துள்ளேன். அனைத்துமே முத்தாய்ப்பான பாடல்கள். எனவே வரிசை படுத்த வில்லை. 

1. போகாதே... (தீபாவளி)

யுவன் குரல் என்றதும் முதலில் நினைவில் வரும் பாடல்.. நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது வந்த படம். அன்று முதல் என் நினைவைவிட்டு நீங்காது இருக்கும் ஒரு பாடல். யுவனின் குரலில் ஒரு ஏக்கம் தெரியும்.

கண்ணொளியில் பார்க்க ...




2. ஏதோ ஒன்று ... (பையா)



கடந்த சில நாட்களாக நான் முணுமுணுக்கும் பாடல். இதற்கு முன் அதிக முறை கண்ணொளியில் பார்த்துள்ளேன். ஆனால் கடந்த சில நாட்களாக மிகவும் பிடித்ததற்கு சரியான கரணம் தெரியவில்லை. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், கேட்கும்போதும் யுவன் குரல் ஏதோ செய்யும். அனுபவித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

கண்ணொளியில் பார்க்க ...




"உள்ளே உன்குரல் கேட்குதடி என்னை என் உயிர் தாக்குதடி"(00:01:35 in video) என்ற வரியின் போது கார்த்தியின் முக பாவம் மிக அருமையாக பொருந்தி இருக்கும்.

3. கடலோரம் ஒரு ஊரு(குங்குமப்பூவும் கொஞ்சுபுறவும்)

அதிகம் பார்த்து இருக்கமாட்டிர்கள் என நினைக்கிறன். ஆனால் மிகவும் அருமையான பாடல். படம் அவ்வளுவாக வெளியில் தெரியாததால் இந்த அருமையான பாடலும் பெரிதாக வெளியில் தெரியாமல் போய்விட்டது. கேளுங்கள் மேலுள்ள பாடல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லா பாடல்.


4. உனக்காகதானே இந்த உயிர் (தமிழ் M.A.)

ஜீவா தன் சிறுவயது காதலியை தேடி அடைந்ததும் வரும் பாடல். படமும் மிக சிறப்பாகவே இருக்கும். சில நாட்களுக்கு என் Caller Tune ஆக இருந்ததாய் நினைவு. பாடல் வரிகள் நினைவில் நிற்கும்படி அமையப்பெற்ற பாடல்.

5. இது காதலா? (துள்ளுவதோ இளமை)

பள்ளி நாட்களில் மிகவும் பிடித்த பாடல். பதினோராம் வகுப்பு படிக்கும்போதும் வந்த படம். ஆனால் படத்தை முழுதாக பார்க்கும் வாய்ப்பு நிறைய நாட்கள் பிறகே கிடைத்தது. யுவன் குரலில் நான் கேட்ட முதல் பாடல் இதுதான். 

6. இதுவரை இல்லாத (கோவா)

மிக எதிர்பார்த்து சென்ற படம். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். யுவன் இசையில் இந்த ஒரு பாடல் மற்றும் சிறப்பாய் இருத்தது. சோகமாய் பாடும் பாடலை யுவன் சொந்த குரலில் பாடியிருப்பார். கடைசியாகவும் , பல நாட்களாகவும் என் Caller tune இதுதான்.




7. ஒரு கல் ஒரு கண்ணாடி (SMS)

நான் பார்த்த சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்று. கல்லூரி இறுதி ஆண்டு கட் அடித்து சென்ற முதல் படம். நகைச்சுவை படமாகினும் சிறப்பான காதல் பாடல் இது. உயிரே உன்னை பார்த்தாலே என்ற ஒரு பாடலையும் யுவன் பாடி இருப்பர். 




8. நட்புக்குள்ளே (சென்னை 28)

இது ஒரு மாறுதலான பாடல். நட்பின் பிரிவை பற்றிய பாடல். கேட்க இனிமையாக இருக்கும்.

அணைத்து பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும் என்ற நினைவில் பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் சிறந்த பாடல்களை மறந்திருந்தால் பின்னூட்டம் இடுங்கள். அடுத்த பதிவில் வேறு ஒரு பிரிவில் சிறப்பான பாடல்களை பார்ப்போம். 

நன்றி.